உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எனக்கான போதை இசை...: சொல்கிறார் சாம் சி எஸ்

எனக்கான போதை இசை...: சொல்கிறார் சாம் சி எஸ்


இசையமைப்பாளர் சாம் சி எஸ்க்கு இன்று பிறந்த நாள். அதை முன்னிட்டு அவர் அளித்த பேட்டி: என்னோட பிறந்தநாள் அதுவுமா நான் உங்ககூட பேசுறதுல ரொம்ப சந்தோஷப்படுறேன். இத்தனை வருஷம் கடந்து வந்த இந்த பாதையை நினைச்சு பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குது. எப்படின்னா நிறைய கஷ்டங்கள் பட்டுதான் இந்த ஒரு பொசிஷன்க்கு வந்து இருக்கிறேன். அதை தக்கவெச்சுக்கிறதுங்கறது பெரிய விஷயம். மக்களுக்கு நிறைய மியூசிக் நல்லதா கொடுக்கணும். ஒரு வெறின்னு சொல்வாங்களே, அதுவும் எனக்குள் இருக்குது. என்னுடைய பாடல்களை நீங்க விமர்சனம் பண்ணுங்க, ரசியுங்க. ஏன்னா அதுக்கான எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்குது.

அறிமுகம் டூ 100வது படம்

'அம்புலி' படம் மூலம் இசையமைப்பாளர் ஆனேன். கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' எனக்கு 100வது படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் படம் பண்ணிட்டேன். இப்ப 100 படம் தாண்டி போயிட்டு இருக்குதுங்க. இந்த 100 படத்துல கத்துக்கிட்டதை அடுத்த 100 படங்கள் அதோட பிரம்மாண்டமா நல்லா பண்ணனும்னு ஆசையில இருக்கேன்.

இந்த பீல்டுல இதுக்கு முன்னாடி நமக்கு யாருமே இல்லை. சினிமாவுல இருந்து நமக்கு முதல் தலைமுறை, நம்மதான் பர்ஸ்ட் டைம் வந்தோம். அதனால வந்து கத்துக்குறதுக்கே நிறைய படங்கள் ஆச்சு. அதாவது சினிமாத்தனத்தை கத்துக்குறதுக்கு, மியூசிக்ல... தொடர்ந்து அடுத்தடுத்து பண்ணக்கூடிய எல்லா படங்கள்லயும் இந்த 100 படங்கள்ல எடுத்த அனுபவத்தை வெச்சு நல்லா பண்ணனும்னு இருக்கு. ரொம்ப சிறந்த ஒரு இசை கொடுக்கணும் அப்படின்னு இருக்கு. நம்ம டிபரண்ட் ஜானர், டிபரண்ட் லேங்குவேஜ், டிபரண்ட் கண்ட்ரில இருக்குற மியூசிக் எல்லாமே பண்றோம். சோ, அவ்வளவு பண்றதுக்கான படங்கள் வர்றதும் அவ்வளவு படம் பண்றதுக்கான ஒரு தைரியமும் கிடைச்சது இதுக்கு முன்னால பண்ண இத்தனை படங்கள் உடைய அனுபவம்தான்.

ஒன்றரை நிமிடத்தில் முடிந்த பாடல்

இந்த 100 படத்துல என்ன டியூன் ஈஸியா டக்குன்னு வந்தது? எந்த டியூன் ரொம்ப நாளா வந்து கம்போஸ் பண்ணீங்க? என கேட்கிறாங்க... கார்ல வரும்போது ஒரு ரெண்டு செகண்ட்ல பண்ணதுதான் 'டசக்கு டசக்கு' பாட்டு. சும்மா நம்ம வண்டி ஓட்டிக்கிட்டே தட்டிக்கிட்டே ஏய் டசக்கு டசக்கு டசக்கு டசக்கு... அப்படி சும்மா பாடுனது, அதை அப்படியே போன்ல ரெக்கார்ட் பண்ணி பண்ண பாட்டு. அது ரொம்ப ஈஸியா, ஆல்மோஸ்ட் ஒரு 1, 1½ நிமிஷத்துல முடிஞ்ச பாட்டு. கஷ்டப்பட்டு பண்ணது அப்படின்னா... நிறைய சாங்ஸ் இருக்குது.

அதுல ஹிந்தில வந்து ஒரு பாட்டு, நான் வந்து 'மஹாவதார் நரசிம்மா' அப்படின்னு சொல்லி ஒரு இது பண்ணிருந்தேன். அதுல வந்து ஒரு சாங் இருக்கும். ஆக்சுவலி ஒரு தாயும் அவளுடைய குழந்தையும் வர்ற சாங், அது ரொம்ப கஷ்டப்பட்டு பண்ணது. ஏன்னா அது நிறைய ஹிந்துஸ்தானி, ஏன்னா நான் வந்து கர்நாடிக் பேஸ்டு. சோ, ஹிந்துஸ்தானில வந்து அதை பண்ணனுங்கறதுனால எனக்கு அது கொஞ்சம் டைம் எடுத்தது. அது டைம்னா ரொம்ப இல்லை, அதுவும் சீக்கிரம் தான்.

நடிப்பு

நடிக்க நிறைய கதைகள் வருது. ரீசன்ட்டா ஒருத்தங்க வந்து அன்பு மிகுதியா கதை சொல்றதுக்கு முன்னாடி கன்பார்ம் பண்ணி, ஸ்டூடியோவெல்லாம் ஓபன் பண்ணிட்டாரு. என்னன்னா, இப்ப எனக்கு நடிக்கத் தெரியுமா அப்படிங்கறதெல்லாம் அது ரெண்டாவது. ஆனால் நம்மளுடைய விருப்பம் அது இல்லை. நம்ம வந்து புல்லா மியூசிக்... இதுலயே இன்னும் நம்ம சாதிக்கிறதுக்கு எவ்வளவோ இருக்கு. ஏன்னா இப்ப நான் வந்து பார்த்து வளர்ந்தது வந்து ராஜா சார், ரஹ்மான் சார் இவங்கதான்.

ராஜா சார் வந்து இவ்வளவு படங்கள், இவ்வளவு இது பண்ணிருக்காரு. அவருடைய இடத்தோட ஒரு படியில கூட நம்ம இன்னும் மிதிக்கல. சோ, நமக்கு இன்னும் பண்றதுக்கு இதுலயே நிறைய இருக்குது மியூசிக்ல. பட் என்னன்னா, ஒரு நடிகரா ஆயிட்டோம்னா உடனே எல்லாரும் பார்த்துருவாங்க, எல்லாருக்கும் தெரிஞ்சிரும் அப்படிங்கற அந்த புகழ் பின்னால ஓடுறதை விட, இது ஒரு இசை மூலமா ஓடுறது பிடிச்சுருக்கு. நான் எல்லா விதமான மியூசிக்கும் பண்றேன். சோ, இந்த மியூசிக் மூலமா எனக்கு ஒரு பாராட்டு வருதுங்கறதை நான் அதைவிட பெருசா நினைக்கிறேன்.

தூக்கம்

தூங்குறது ரொம்ப கம்மியான நேரம்தான். அது ஒரு பிராப்ளமாவே இருக்கு. எனக்கு ரீசன்ட்டா வந்து டாக்டர்ஸ் மீட் பண்ணும்போது அவங்க சொன்னாங்க... நான் இந்த டைமிங்ல எல்லாருக்கும் சொல்லிக்கிறேன். ஏன்னா தூக்கம்ங்கறது மட்டும்தான் நம்ம உடம்போட பிரச்னைகளுக்கு பாதி காரணம் தூக்கமும் தண்ணி குடிக்காததும் தான். இந்த ரெண்டுமே நமக்கு பெரிய பிரச்னையா இருக்கு.

எனக்கான போதை

என்னன்னா, ஒவ்வொருத்தங்களுக்கும் ஒரு போதை இருக்கும். எனக்கு என்ன போதைனா, நான் ஹாஸ்டல்ல படிச்சதுனால காலையில 5 மணிக்கெல்லாம் எழுப்பி விட்டுருவாங்க ஹாஸ்டல்ல. நான் ராயப்பன்பட்டிங்கற இடத்துல ஹாஸ்டல்ல படிச்சேன். சோ, 5 மணிக்கு எழும்புறான்னு அடிப்பாங்க. சோ, அந்த பழக்கம் 3 மணிக்கு நான் நைட்டு தூங்குனாலும் 5 மணிக்கு முழிப்பு வந்துரும். 5 மணிக்கு எந்திரிச்சு அந்த வேலை பார்க்குறதுக்கான ஒரு சந்தோஷம் இருக்கு. அது ஆட்டோமேட்டிக்கா வந்துரும். நம்மளையே அறியாம பிரஷ் பண்றதுக்கு ஆட்டோமேட்டிக்கா கை போயிருமோ, அந்த மாதிரி காலையில எந்திரிச்ச உடனே பாட்டு பாடணும் அப்படிங்கறது.

சோ, இவ்வளவு படங்கள் இவ்வளவு இது பண்ணாலும் நமக்கு தூங்குறதுக்கு டைம் இல்லைங்கறதுதான். ஆனா அது வந்து இப்ப நான் அதுல கான்சன்ட்ரேட் பண்ணி கொஞ்சம் தூங்குறதுக்கு ட்ரை பண்றேன். ஆனா தூக்கம் கொஞ்சம் கம்மிதான். ஏன்னா அது பிரஷர்ல வொர்க் பண்றது இல்லை. அய்யயோ பண்ணியே ஆகணும் தூங்கக் கூடாது அப்படி இல்லை. ஒரு நல்ல படம் பார்த்துட்டு இருந்தா நமக்கு தூக்கம் வராதுல, அந்த மாதிரி இசை பண்ணும்போது நமக்கு தூக்கம் வராது. தேங்க்யூ! இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !