உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமோக வரவேற்பில் 'ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே'

அமோக வரவேற்பில் 'ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே'

ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த படங்களில் ஒன்று 'ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே'. இன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழிகளிலும் கூடுதலாக ஆங்கிலத்திலும் வெளியாகி இருக்கிறது. தென்னிந்தியா மாநகரங்கள் சிலவற்றில் ஹிந்தியிலும் கூட வெளியிடப்பட்டுள்ளது.

படத்திற்கான விமர்சனம் இருவிதமாக இருந்தாலும் படத்தின் ஆன்லைன் முன்பதிவு அமோகமாக உள்ளது. இந்த வார இறுதி வரையில் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

முக்கிய ஆன்லைன் இணையதளம் ஒன்றில் கடந்த ஒரு மணி நேரத்தில் 48 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் கடந்த வாரம் வெளியான விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்திற்கு வெறும் 4 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு 'ஸ்பைடர்மேன்' படம் கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !