உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜூன் - அட்லியின் 'ராக்கா' குறித்த வதந்திகள்: முற்றுப்புள்ளி வைக்கப்போகும் கிளிம்ஸ்!

அல்லு அர்ஜூன் - அட்லியின் 'ராக்கா' குறித்த வதந்திகள்: முற்றுப்புள்ளி வைக்கப்போகும் கிளிம்ஸ்!


அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் 'ராக்கா' படம் குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் போதிலும், தயாரிப்பாளர்கள் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகின்றனர். படத்தின் வெளியீட்டுத் திட்டம் அல்லது முழுமையான நடிகர், நடிகையர் விவரங்கள் எதுவுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும், சமூக வலைதளங்களில் இதுகுறித்த வதந்திகளும் ரசிகர்களின் கணிப்புகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

சமீபத்திய தகவல்களின்படி, அல்லு அர்ஜூன் இதில் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், புஷ்பா படத்தைப்போல இப்படமும் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அறிவியல் புனைக்கதை, விசித்திர விலங்கு உலகக் கதைகள் மற்றும் எதிர்கால பின்னணி கொண்ட நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்ட பேன்டஸி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை, தீபிகா படுகோனே மட்டுமே இப்படத்தில் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரின் பெயர்களும் இப்படத்துடன் இணைத்து பேசப்பட்டு வருகின்றன. ஆனால், தயாரிப்பு தரப்பு இந்த பெயர்களை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 'ராக்கா' படம் குறித்த சிறப்பு வீடியோ கிளிம்ஸ் ஒன்றை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வெளியாகி, இப்படம் குறித்து பரவி வரும் பல வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !