உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பான் இந்தியா படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கும் நயன்தாரா!

பான் இந்தியா படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கும் நயன்தாரா!


தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக நயன்தாரா தனது இடத்தை நிலையாகத் தக்கவைத்துக் கொண்டு வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் அவர் ஒப்புக்கொள்ளும் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்திருந்தாலும், தென்னிந்திய கதாநாயகிகளிலேயே 12 கோடி என அதிக சம்பளம் வாங்கி வருபவர் நயன்தாராதான். இந்த ஆண்டின் தொடக்கத்தில், சிரஞ்சீவிக்கு ஜோடியாக 'மன சங்கர வரபிரசாத் காரு' என்ற படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.

தற்போது 40களில் அடியெடுத்து வைத்துள்ள நயன்தாரா, ஒரு புதிய வியூகத்தைப் பின்பற்றுவதாக கூறுகிறார்கள். அதாவது, கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படங்களை அதிகம் தேர்வு செய்யாமல், முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் பான்-இந்தியா படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். அதே நேரத்தில், சண்டைக்காட்சிகள் மற்றும் நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரங்களைத் தேர்வு செய்கிறார்.

இந்நிலையில் அடுத்தபடியாக யஷ் உடன் நடிக்கும் 'டாக்ஸிக்' படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் நயன்தாரா இதுவரை நடிக்காத ஒரு புதிய தோற்றத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்தும், சிகரெட் பிடிக்கும் காட்சிகள் உட்பட ஒரு தைரியமான காட்சிகளிலும் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் இப்படத்தின் முக்கியமான கீ ரோல் என்றும் கூறப்படுகிறது.

அடுத்து பாலிவுட்டில், வம்சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதில் சல்மான்கானின் மனைவியாக நடித்தாலும், அது ஒரு வழக்கமான குடும்பப் பெண் கதாபாத்திரமாக இல்லாமல், நடிப்புக்கு அதிக வாய்ப்புள்ள ஒரு வலுவான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். அந்த வகையில் இந்த இரண்டு படங்களும், நயன்தாரா வழக்கமான கதாநாயகி என்ற கட்டமைப்பிற்குள் சுருங்காமல், பிரம்மாண்ட தயாரிப்புகளில் வலுவான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து தனது திரைப்பயணத்தை திட்டமிட்டு தொடர்ந்து வருவதைக் காட்டுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !