உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகேஷ் பாபுவுடன் இணைந்து படம் பார்த்த பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ்!

மகேஷ் பாபுவுடன் இணைந்து படம் பார்த்த பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ்!


எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது இயக்கி வரும் படம் வாரணாசி. இப்படத்தில், மகேஷ் பாபு ருத்ராவாகவும், பிரியங்கா சோப்ரா மந்தாகினியாகவும், பிரித்விராஜ் சுகுமாரன் கும்பாவாகவும் நடிக்கிறார்கள். மகேஷ் பாபுவின் வேடம் ஹனுமனை நினைவுபடுத்தும் வகையில் இடம்பெற்றுள்ளது. ராமாயண காலத்தை தழுவி அப்பா- மகனுக்கிடையே உள்ள பாசப்பிணைப்பை கருவாக கொண்டு உருவாகி வரும் இப்படம் ஏப்ரல் 7, 2027 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள மகேஷ் பாபுவின் ஏஎம்பி சினிமாஸில் அவருடன் சேர்ந்து படம் பார்த்துள்ளனர். ஆனால், இவர்கள் மூவரும் எந்தத் திரைப்படத்தைப் பார்த்தார்கள் என்பது தெரியவில்லை. இதையடுத்து இந்நிகழ்வை தொகுத்து வழங்கியதில் பெருமகிழ்ச்சி அடைந்த ஏ எம்பி சினிமாஸ், இந்த மறக்க முடியாத மாலையின் அழகான புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !