உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வைரலாகும் டீப்பேக் புகைப்படங்கள்! மிருணாள் தாக்கூர் எச்சரிக்கை!

வைரலாகும் டீப்பேக் புகைப்படங்கள்! மிருணாள் தாக்கூர் எச்சரிக்கை!


நடிகை மிருணாள் தாக்கூர் கடைசியாக ஹிந்தியில், 'ஹாய் ஜவாணி தோ இஷ்க் ஹோனா ஹை' மற்றும் 'டகோயிட்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். தனது திரைப் பயணத்தின் வெற்றிகரமான கட்டத்தில் இருக்கும் அவர், தற்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டு பரப்பப்பட்டதற்கு கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன்னை தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ள போலி புகைப்படங்களை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும், அனுமதியற்ற மற்றும் சட்டவிரோதமான இந்த உள்ளடக்கத்தை தொடர்ந்து பரப்பினால் சட்டப்பூர்வ நடவடிக்கை மற்றும் அதிகாரப்பூர்வ புகார்கள் அளிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ள மிருணாள் தாக்கூர், இதற்கு முன்பும் பல நடிகைகள் இதுபோன்ற ஏஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கி வெளியிடப்பட்ட டீப்பேக் வீடியோக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தவறை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆனால் மிருணாள் தாக்கூரின் இந்த கடுமையான எச்சரிகைக்கு பிறகும், அந்த சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் இன்னும் இணையத்தில் நீக்கப்படாமல் உள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முன்னதாக, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நடிகைகளும் இதுபோன்ற டீப் பேக் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு அதற்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !