டாக்சிக் பட டிரைலர் வெளியானது
யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட படம் டாக்சிக். நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீஸர் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், பாடல்கள் மூலம் எதிர்பார்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில் இந்த கேங்ஸ்டர் ஆக் ஷன் படத்தின் டிரைலர் 07:01 மணிக்கு வெளியானது.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.