உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்ற பூஜா ஹெக்டே

நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்ற பூஜா ஹெக்டே

சமீபத்தில் இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்வு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரம்மாண்டமான முறையில் இந்திய தின அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்திய கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இந்த மாபெரும் நிகழ்வில் உலக அளவில் புகழ்பெற்ற பல இந்திய பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம்.

இந்த ஆண்டு அப்படி நடைபெற்ற நிகழ்வில் நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்திய கொடியை ஏந்தி இந்த அணிவகுப்பில் பங்கேற்றார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் அவர் உரையாற்றி ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !