உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பார்வையற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாரா சூர்யா?

பார்வையற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாரா சூர்யா?

சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு மே மாதத்தில் வெளியான கருப்பு படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அதையடுத்து அவரது சமீபத்திய வெளியீடான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் தமிழ், தெலுங்கில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் தனது மூன்றாவது திரைப்படத்தையும் வெளியிட அவர் தயாராகி வருகிறார்.

மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கும் தனது 47 வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யா இதில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவருடன் நஸ்ரியா, நஸ்லன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து மற்றொரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அது என்னெவென்றால், இதில் சூர்யா பார்வையற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஒரு வழக்கை விசாரிக்கும் போது அவர் தன் பார்வையை இழக்கிறார் என்றும், பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வெளிவரும் அதே வழக்கை அவர் விசாரிப்பதே கதைக்களம் என்றும் கூறப்படுகிறது.

இந்த கதைக்களம் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பதை அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் வரை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !