ரூ.200 கோடி வசூலைக் கடந்த இருமுடி
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் ரவி தேஜா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛இருமுடி'. தமிழில் ‛இருமுடி கட்டு' என்ற பெயரில் ரிலீஸானது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்தார். முக்கிய வேடத்தில் சிறுமி நக்ஷத்திரா நடித்தார். சிவா நிர்வானா இயக்கியிருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.
ஆன்மிகப் பின்னணியில் அப்பா - மகள் பாசக் கதையுடன் பெண் பிள்ளைகளுக்கான விழிப்புணர்வு படமாகவும் இதன் கதை அமைந்து இருந்தது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ரவி தேஜாவிற்கு இந்தபடம் வெற்றியை தந்துள்ளது. ஆரம்பம் முதலே வசூலை குவித்து வந்த இப்படம் தற்போது ரூ.200 கோடி வசூலை தாண்டி உள்ளது.
இந்தப் படத்திற்காக எந்தவிதமான டிக்கெட் கட்டண உயர்வும் தெலுங்கு மாநிலங்களில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. சாதாரண டிக்கெட் கட்டணத்திலேயே இப்படி ஒரு வரவேற்பைப் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.