உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'வைல்ட் தமிழ்நாடு': வன ஆவணப் படம் வெளியானது

'வைல்ட் தமிழ்நாடு': வன ஆவணப் படம் வெளியானது


பொதுவாக வெளிநாடுகளில்தான் 'வைல்ட் லைப்' திரைப்படங்கள் அதிக அளவில் வெளிவரும். டிஸ்கவரி நிறுவனம் ஏராளமான வைல்ட் லைப் படங்களை தயாரித்துள்ளது. அதனை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழில் வெளிவந்துள்ள படம் 'வைல்ட் தமிழ்நாடு' என்கிற ஆவணப் படம்.

வனவிலங்கு புகைப்பட கலைஞரும், திரைப்பட இயக்குநருமான கல்யாண் வர்மா இந்த படத்தை இயக்கி உள்ளார். சுந்தரம் பாஸ்டனர்ஸ் நிறுவனம், நேச்சர் இன் போகஸ் அமைப்புடன் இணைந்து தயாரித்துள்ளது. சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தின் சூழலமைப்புகளை இந்த ஆவணப்படம் விவரிக்கிறது.

இதுவரை கேமராவில் பதியப்படாத காட்சிகள் முதன் முறையாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. படத்திற்கு நடிகர் அரவிந்த் சாமி பின்னணி குரல் கொடுத்துள்ளார். இந்த படம் தற்போது மால் தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !