உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முன்பதிவு : கடும் போட்டியில் கார்த்தி, சூரி படங்கள்

முன்பதிவு : கடும் போட்டியில் கார்த்தி, சூரி படங்கள்


2026ம் ஆண்டின் விநாயகர் சதுர்த்தி வரும் திங்களன்று செப்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய விடுமுறை தினத்தையும் வைத்து இந்த வாரம் இரண்டு முக்கிய படங்கள் வெளியாகின்றன. வழக்கமாக வெள்ளிக் கிழமை தான் புதிய படங்கள் வெளியாகும். இப்போது வியாழக் கிழமையிலும் வெளியிடுகிறார்கள். நாளை அமாவாசை தினம் என்பதும் அதற்கு ஒரு காரணம்.

இந்த வாரத்தின் இரண்டு முக்கியப் படங்களாக கார்த்தி நடித்துள்ள 'சர்தார் 2', சூரி நடித்துள்ள 'மண்டாடி' ஆகிய இரண்டு படங்கள் வருகின்றன. இந்த வருடத் துவக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த 'வா வாத்தியார்' படுதோல்வி அடைந்ததால் அவருக்கு 'சர்தார் 2' படத்தின் வெற்றி மிக முக்கியம். தொடர்ந்து நாயகனாக வெற்றி பெற்று வருதால் அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள சூரிக்கு 'மண்டாடி' வெற்றியும் முக்கியம்.

இந்த இரண்டு படங்களுமே வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரண்டு படங்களுக்கான முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆன்லைன் இணையதளங்களில் 'சர்தார் 2' படத்தின் முன்பதிவு சற்றே முன்னணியில் உள்ளது. இரண்டு படங்களுக்குமான முன்பதிவு டிக்கெட் விற்பனை வித்தியாசம் மிகவும் குறைவாகவே உள்ளது.

படம் வெளியான பிறகு வரும் விமர்சனங்களைப் பொறுத்து இரண்டு படங்களில் எது இன்னும் முன்னேறிச் செல்லும் என்பது தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !