இன்ஸ்டாவை ஆக்கிரமித்த 80ஸ் டிரெண்ட்.... பிரபல நடிகர், நடிகைகளின் போட்டோக்கள் வைரல்
பொதுவாக சமூக வலைதளங்களில் ஏதேனும் ஒரு விஷயம் மிகவும் டிரெண்டாவது வழக்கம். குறிப்பாக, இந்த ஏஐயின் அபரிமிதமான வளர்ச்சியால், கடந்த காலம், எதிர்காலம் என அனைத்து சூழல்களையும் மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்துவது என்பது மிகவும் எளிமையான விஷயமாக மாறி விட்டது.
அண்மையில் சாட் ஜிபிடியால் (ChatGPT) உருவாக்கப்பட்ட 'ஜிப்லி' அனிமேஷன் போட்டோக்கள் நெட்டிசன்கள் இடையே மிகவும் டிரெண்டானது. ஏஐ செயலி மூலம் தங்களின் போட்டோக்களை அனிமேஷனாக சித்தரித்து, அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக, 80ஸ் காலத்திலான புகைப்படங்கள் உருவாக்குவது தற்போது இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகியுள்ளது. அதாவது நெட்டிசன்கள் தங்களின் புகைப்படங்களை, 1980 காலகட்டங்களில் வெளியான திரைப்பட கதாபாத்திரங்கள், பழைய குடும்ப போட்டோ ஆல்பம், விண்டேஜ் ஸ்டுடியோ போட்டோ போன்றத்தை உருவாக்கி வருகின்றனர். அந்தப் போட்டோக்களில் அந்தக் காலத்து ஷர்ட், பெல்ஸ் பேன்ட், மீசை, ஹேர்ஸ்டெயில் என அனைத்தும் கணகச்சிதமாக பொருந்தியுள்ளது.
இந்த டிரெண்டில் நெட்டிசன்கள் மட்டுமல்லாது, பல்வேறு நடிகைகள், நடிகர்கள் மற்றும் பிரபலங்களும் இணைந்துள்ளனர். நடிகைகள் ப்ரீத்தி முகுந்தன், அனுபமா பரமேஸ்வரன், மடோனா ஜெபஸ்டின், ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சிமா மோகன், அசோக் செல்வன் உள்ளிட்டோர் இந்த டிரெண்டிங்கில் இணைந்துள்ளனர். அதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த டிரெண்டிங்கில் இணைந்துள்ளது. தனது அணி வீரர்களை பழங்கால தோற்றத்துடன் உருவாக்கி, டிரெண்டாக்கி வருகிறது.
தற்போது, இந்த டிரெண்ட் இன்ஸ்டாகிராமில் 'ADD YOURS' என்ற ஸ்டிக்கர் மூலம் உலகம் முழுவதும் பகிரப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் 80ஸ் டிரெண்டில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படத்தை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
லிங்க்: https://cinema.dinamalar.com/web-stories/cine-celebrities-in-80s-trend/5840