உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின்றி நடந்து முடிந்த ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா

ரஜினியின்றி நடந்து முடிந்த ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தில் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் நேற்று இரவு நடந்து முடிந்துள்ளது. ஆனால், இதில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை. அவர் தர்மன் படப்பிடிப்புக்காக மைசூரில் இருந்தார். பொதுவாக ரஜினிகாந்த் பட பாடல் வெளியீடு பிரமாண்டமாக நடக்கும். ரஜினி பேசுவது வைரல் ஆகும். ஆனால், இந்தமுறை ரஜினிகாந்த் இல்லாமலே அவர் பட பாடல் வெளியீட்டு விழா நடந்துள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் என்கிறார்கள். இந்த சமயத்தில் ரஜினிகாந்த் எது பேசினாலும் அது பிரச்னையாகும். அவர் சாதாரணமாக பேசினாலே அது அரசியல் ஆகும். அது படத்தின் ரிலீசுக்கு பிரச்னையை ஏற்படுத்தலாம் என நினைத்து, விழாவை இப்படி முடித்துவிட்டார்களாம். சூழ்நிலையை புரிந்துகொண்டு ரஜினியும் மைசூரில் இருந்துவிட்டாராம்.

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்று பல மாதங்கள் ஆனாலும், இன்னமும் அவரை நேரில் ரஜினிகாந்த் சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், சென்னையில் நேற்று முதல்வர் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா பட நிகழ்ச்சி நட்சத்திர ஓட்டலில் நடந்தது. அதில் கடைசி நேரத்தில் ஜேசன் சஞ்சய் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டார். இயக்குனருக்கு உடல் நலம் சரியில்லை என காரணம் கூறப்பட்டது.

ஆனால், இன்னொரு தரப்போ, நேற்று மதியம் விஜய் தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவர் மகன் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தான் ஏதாவது பேசினால் அல்லது கேள்விளுக்கு ஏதாவது பதில் அளித்தால் அது வைரல் ஆகும், சர்ச்சை ஆகும். அது அரசியலில் வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைத்து ஜேசன் சஞ்சய் அந்த நிகழ்ச்சியை தவிர்த்து விட்டார் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !