7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார் காவ்யா
கன்னட தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக நடித்தவர் காவ்யா சாஸ்திரி. பின்னர் 'மகாலட்சுமி' தொடரில் நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு சின்னத்திரையை விட்டு ஒதுங்கி இருந்த காவ்யா தற்போது 'அபிராமி' என்ற தொடரில் நடித்து வருகிறார்.
தனது ரீ எண்ட்ரி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காவ்யா அதில் பேசியிருப்பதாவது: தமிழ் நேயர்களுக்கு மகாலட்சுமியாக என்னைத் தெரியும். மகாலட்சுமி தொடர் முடிந்து 7 ஆண்டுகள் ஆகின்றன. 900 நாள்கள் அத்தொடர் ஒளிபரப்பானது. தமிழ் மக்களிடம் இருந்து மகாலட்சுமி தொடருக்கு அதிக அன்பு கிடைத்தது.
இப்போது 7 ஆண்டுகள் கழித்து அபிராமியாக உங்கள் முன்பு வரப்போகிறேன். மகாலட்சுமியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது அபிராமி பாத்திரம். இதுவும் மதிய நேரத்தில்தான் ஒளிபரப்பாகிறது. வீட்டுப் பெண்களுக்கு மிகவும் பிடித்த நேரத்தில் ஒளிபரப்பாவதால், அவர்களை நிச்சயம் கவரும்.
தமிழ் சேனல் என்றாலே மிகவும் மகிழ்ச்சிதான். மறுபடியும் தமிழ் சேனலில் என்னுடைய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தெரிந்த களம் என்பதால், தெரிந்த ரசிகர்கள் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் அபிராமி தொடரில் நடிக்கிறேன். இவ்வாறு பேசியுள்ளார்.