22 ஆவது வருடத்தில் நிறைவுக்கு வருகிறது 'காபி வித் கரண்' நிகழ்ச்சி
பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோகர், படங்கள் மூலம் எந்த அளவுக்குப் புகழ் பெற்றாரோ, அதைவிட தான் நடத்தி வந்த 'காபி வித் கரண்' நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களிடம் இன்னும் அதிக அளவில் பிரபலமானார். பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் பலரையும் தனது நிகழ்ச்சிக்கு அழைத்து, எதார்த்தமாகவும், ஜாலியாகவும், வேடிக்கையாகவும் பேச வைத்து ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தைத் தனது நிகழ்ச்சியால் கொடுத்து வந்தார் கரண் ஜோகர்.
2004-ல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, கடந்த 22 ஆண்டுகளாக 8 சீசன்கள் மற்றும் 161 எபிசோடுகளைக் கடந்து, தற்போது ஒன்பதாவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. ஆனால், இந்த ஒன்பதாவது சீசனுடன் இந்த நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது என கரண் ஜோகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதை நிறுத்துவதற்கு வேறு தனிப்பட்ட எந்தக் காரணமும் இல்லை, இந்த நிகழ்ச்சியின் பயணம் அதன் இயல்பான முடிவை எட்டியுள்ளதை உணர்ந்து இந்த முடிவை எடுத்ததாகக் கரண் ஜோகர் தெரிவித்துள்ளார்..