உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛சிக்மா' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானது பெருமை : பரியா அப்துல்லா

‛சிக்மா' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானது பெருமை : பரியா அப்துல்லா

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான 'சிக்மா' திரைப்படம் கடந்தவாரம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆக் ஷன் கலந்த படமாக வெளியாகி உள்ள இப்படத்தின் மூலம் நாயகியாக தமிழில் களமிறங்கி உள்ளார் பரியா அப்துல்லா.

அவர் கூறுகையில், ‛‛சஞ்சய் உடன் பணியாற்றியது அற்புதமான அனுபவம். அவர் உருவாக்க விரும்புவதை பற்றி மிகவும் தெளிவாகவும், நம்பிக்கை உடனும் படமாக்கினார். நிதானமான அவரது அணுகுமுறையால் நாங்களும் உற்சாகமாக பணியாற்றினோம்.

'சிக்மா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருப்பது எனக்கு பெருமை. தற்போது படத்தை திரையரங்குகளில் பார்த்து, ரசிகர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பை பெறுவது, இந்தப் பயணத்தை மேலும் மறக்க முடியாததாக மாற்றியுள்ளது என்றார்.

நடிப்புடன் இணைந்து இரண்டு ஆண்டுகளாக அவர் ராப் இசையை எழுதி, பாடி வருவதுடன், இசை வீடியோக்களை இயக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு இசை வீடியோவை தயாரித்ததன் மூலம் கேமராவுக்குப் பின்னால் தனது பயணத்தில் மற்றொரு முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளார்.

'சிக்மா' படத்தை அடுத்து தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 'வள்ளிமயில்' திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !