உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜெயிலர் 2' வருகையால் 'இரண்டு வானம்' படமும் தள்ளி வைப்பு?

'ஜெயிலர் 2' வருகையால் 'இரண்டு வானம்' படமும் தள்ளி வைப்பு?


தமிழ் சினிமாவில் புதிய படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் அவை நிரந்தரமானதில்லை என்ற நிலை எழுந்துள்ளது. பெரிய படங்களின் வெளியீடுகளால் இதர படங்களின் வெளியீடுகள் தள்ளி வைப்பு ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், அதைவிடவும், அந்தப் படங்களின் ஓடிடி உரிமையை வாங்கும் நிறுவனங்கள் சொல்லும் தேதியில்தான், புதிய படங்களின் வெளியீட்டுத் தேதிகளும் தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு புதிய படத்திற்கும் மற்றொரு புதிய படத்திற்கும் சரியான இடைவெளி வேண்டும் என ஓடிடியை வாங்கும் நிறுவனங்கள் முடிவு செய்கின்றன.

அக்டோபர் 16ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட தனுஷ் நடித்த 'ஓம்' படத்தின் வெளியீடு நவம்பர் 20க்குத் தள்ளி வைக்கப்பட்டது. அதே அக்டோபர் 16ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் ஆண்டனி நடித்த 'அப்பா குட்டி' படமும் தள்ளி வைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்து, அக்டோபர் 23ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விஷ்ணு விஷால் நடித்துள்ள 'இரண்டு வானம்' படமும் தள்ளி வைக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள். 'ஜெயிலர் 2' வெளியான அடுத்த வாரமே இப்படத்தின் தேதி இருப்பதால் சரியான தியேட்டர்கள் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் தள்ளி வைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !