உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயவு செய்து பெண் இயக்குனர் என சொல்லாதீங்க : மதுமிதா வேண்டுகோள்

தயவு செய்து பெண் இயக்குனர் என சொல்லாதீங்க : மதுமிதா வேண்டுகோள்

‛வல்லமை, கொல கொலயா முந்திரிக்கா, கேடி என்கிற கருப்பு துரை' போன்ற படங்களை இயக்கிய மதுமிதா, ‛லவ் ஆல்வேஸ்' என்ற வெப்சீரிசை இயக்கி உள்ளார். இது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிவிட்டது. இப்போது அர்ஜுன் தாஸ் நடித்த 'ஜான் டோ' படத்தை இயக்கி இருக்கிறார். நவம்பர் 13 முதல் படம் ரிலீஸ். 'பாகுபலி' உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளை தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் படத்தை தயாரிக்கிறது. சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் குறித்து மதுமிதா கூறுகையில், “ஜான் டோ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா, கொலைகாரனா அல்லது காணாமல் போன குழந்தையா? என்பதை சுற்றி இப்படத்தின் கதை நகர்கிறது. பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. போஸ்டரில் காவலர் சீருடையில் அவர் தோன்றியிருப்பதும், மர்மம் நிறைந்த கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதும் படத்தின் கதைக்களம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

நான் இயக்கிய லவ் ஆல்வேஸ் வெப்சீரிஸ் கதையும் வித்தியாசமானது. வயதான தம்பதிகளான ஜெய பிரகாஷ், ஜெயசுதா விவகாரத்து செய்ய முடிவெடுக்கிறார்கள். ஒரு கிணற்றில் விழுந்தபோது ராம்சான், கவுரிகிஷன் ஆக இளம் தம்பதிகளாக மாறுகிறார்கள். என்ன நடக்கிறது என்பதை 8 எபிஷோட் ஆக சொல்லியிருக்கிறேன். அடுத்து ஹிந்தியில் படம் இயக்குகிறேன். இந்த படங்களை பார்ப்பவர்கள் என்னை குறிப்பிடும்போது இயக்குனர் என சொல்லுங்கள். தயவு செய்து பெண் இயக்குனர் என சொல்லாதீர்கள்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !