ரஜினியுடன் நமோ நாராயண சுவாமிகள் சந்திப்பு
ADDED : 1736 days ago
அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த்திற்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் வீடு திரும்பினார். அதோடு, உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை எனவும் அறிவித்துவிட்டார். இதை அவரது ரசிகர்கள் சிலர் ஏற்றாலும், பலர் ஏமாற்றத்துடன் தான் உள்ளனர். தற்போது அவர், தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், ரஜினி இல்லத்திற்கு நமோ நாராயண சுவாமிகள் வருகைத் தந்தார். அவரை ரஜினியும், லதாவும் வரவேற்றனர். பின்னர் ரஜினியின் மனதை அமைதிப்படுத்த ஸ்படிக மாலை அணிவித்த நமோ நாராயண சுவாமிகள், சிறிது நேரம் அவருடன் உரையாடி விட்டு சென்றார். இந்த போட்டோ சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.