விஷாலை இயக்கும் குறும்பட இயக்குனர்
ADDED : 1784 days ago
விஷால் வெற்றியை சுவைத்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. 2018ல் வெளியான இரும்புத்திரை தான் அவர் கடைசியாக சந்தித்த வெற்றி. அதன்பிறகு வெளிவந்த சணண்டக்கோழி 2, அயோக்யா, ஆக்ஷன் படங்கள் அவருக்கு வெற்றியை தரவில்லை.
தற்போது துப்பறிவாளன் 2, சக்ரா, எனிமி படங்களில் நடித்து வருகிறார். துப்பறிவாளன் 2 மிஷ்கின் விலகியதால் விஷாலே இயக்கி வருகிறார். சக்ரா படம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. ஆர்யா வில்லனா நடிக்கும் எனிமி படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கு பூஜை போட்டுள்ளார் விஷால். இந்த படத்தை எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த துபசரவணா இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகிறது. மற்ற தொழில்நுட் கலைஞர்கள், நடிகர், நடிகைகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.