உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கெட்டப்பை மாற்றிய வையாபுரி - அசத்தும் போட்டோஷுட்

கெட்டப்பை மாற்றிய வையாபுரி - அசத்தும் போட்டோஷுட்

ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் வையாபுரி. பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், தற்போது இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், புத்தாண்டில் புது முயற்சியாக வித்தியாசமான கெட்டப்பில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் வையாபுரி. தனது தலைமுடியை ஒட்ட வெட்டி, கோட் சூட் போட்டு அந்த போட்டோஷூட் புகைப்படங்களில் காட்சி அளிக்கிறார். இந்த கெட்டப்பில் பார்ப்பதற்கு வையாபுரி பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் போன்று இருப்பதாக நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர்.

நடிகைகளுக்கு இணையாக சமீபகாலமாக நடிகர்களும் விதவிதமாக போட்டோஷூட்கள் நடத்தி வரும் சூழ்நிலையில், வையாபுரியின் இந்தப் புதிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !