உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்து கடவுள்களை இழிவுபடுத்திய காமெடி நடிகர் கைது

இந்து கடவுள்களை இழிவுபடுத்திய காமெடி நடிகர் கைது

இந்தி மற்றும் மராட்டிய மொழி சினிமாவின் காமெடி நடிகர் முனாவர் பரூக். அவ்வப்போது மேடை நாடகங்களிலும் நடித்து வருகிறவர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கபே ஒன்றில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில், முனாவர் பரூக்கின் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், முனாவர் பரூக் இந்து கடவுள்களையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இழிவுபடுத்தி பேசினார்.

இது தொடர்பாக பாஜ எம்எல்ஏ மாலினி லட்சுமணன் என்பவரின் மகன் ஏகலைவா சிங் கவுர் காவல் நிலையத்தில் முனாவர் தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளில் இந்து கடவுள்களையும், அமித்ஷாவையும் இழிவுபடுத்துவதாகவும் புகார் செய்தார். அதற்கான வீடியோ ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து முனாவர் ரூக்கும் அவரது குழுவை சேர்ந்த 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !