மிரட்ட வருகிறது பீட்சா 3
ADDED : 1734 days ago
விஜய் சேதுபதி - கார்த்திக் ராஜா கூட்டணியில் வெளியாகி அவர்களை சினிமாவில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி சென்ற படம் பீட்சா. இதை தயாரிப்பாளர் சிவி குமார் தயாரித்தார். தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவானது. ஆனால் வெற்றி பெறவில்லை. இப்போது மூன்றாம் பாகமாக பீட்சா 3 : தி மம்மி என்ற பெயரில் படம் எடுக்கிறார் சிவி குமார். அஷ்வின், காளி வெங்கட், ரவீணா தாஹா, கவுரவ் நாராயணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதை மோகன் கோவிந்த் இயக்குகிறார். திகில் படமாக உருவாகும் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.