உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இன்று முதல் மீண்டும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு

இன்று முதல் மீண்டும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி என எண்ணற்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, பாண்டிச்சேரி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இதற்கு முன்பு நடைபெற்றது. கொரானோ தொற்று காரணமாக கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து அடிக்கடி முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இன்று முதல் ஐதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்கள். இதற்காக படக்குழுவினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்களாம்.

அனைத்து நட்சத்திரங்களும் இன்று ஆரம்பமாகியுள்ள படப்பிடிப்பில் அடுத்தடுத்து கலந்து கொள்ள உள்ளார்களாம். சுமார் ஒரு மாத காலத்திற்கு ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.

இரண்டு பாகங்களாக உருவாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் இந்த வருடத்திலேயே வெளியாகுமா என்பது முதல் பாகத்திற்கான படப்பிடிப்பை முடித்த பிறகுதான் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !