அருண் விஜய் எச்சரிக்கை
ADDED : 1736 days ago
நீண்ட போராட்டத்திற்கு பிறகு நடிகர் அருண் விஜய் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அறிவழகன் இயக்கத்தில் இவர் நடிக்கும் படத்தில் ரெஜினா நாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகி நடிக்க நடிகை தேர்வு நடப்பதாக ஒரு விளம்பரம் வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவல் தனது கவனத்திற்கு வர சமூகவலைதளத்தில், ''எனது பெயரை வைத்து நடிகர்கள் தேர்வு நடப்பதாக ஒரு பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளனர். போலி நபர்கள் பெண்களை குறி வைத்து இது போன்று செய்கின்றன, எச்சரிக்கை தேவை. இதுகுறித்து சைபர் கிரைமிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது'' என அருண் விஜய் தெரிவித்துள்ளார்.