உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் தள்ளிப்போன 'காடன்'

மீண்டும் தள்ளிப்போன 'காடன்'

பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா டகுபட்டி, விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் 'காடன்'. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் யானைகளையும், காடுகளையும் மையமாக வைத்து உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய படம் கொரோனா பிரச்னையால் தள்ளிப்போனது. சமீபத்தில் பொங்கல் தினத்தில் வெளிவருவதாக அறிவித்தனர். இப்போது அதையும் மாற்றி மார்ச் 26ல் தியேட்டரில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !