உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருவண்ணாமலையில் மாஸ்டர் குழு வழிபாடு, சிறப்பு பூஜை

திருவண்ணாமலையில் மாஸ்டர் குழு வழிபாடு, சிறப்பு பூஜை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படம், பொங்கல் விருந்தாக ஜன., 13ல் ரிலீஸாகிறது. கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய படம், கொரோனா பிரச்னையால் 9 மாதங்களுக்கு பின் வெளியாகிறது. அதேசமயம் தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது முதன்முறையாக விஜய் படம் ஹிந்தியிலும் டப்பாகி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அர்ஜுன் தாஸ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டு உள்ளனர். மேலும் மாஸ்டர் படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகளும் மேற்கொண்டனர். இவர்கள் கோவிலுக்கு சென்ற பூஜையில் பங்கேற்ற படங்கள் சமூகவலைதளத்தில் வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !