லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா?
ADDED : 1779 days ago
சூரரைப்போற்று படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதன்பிறகு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அந்த படத்தை முடித்ததும் வாடிவாசல் படத்தை ஆரம்பிக்கிறார்.
இந்நிலையில் இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கயிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சூர்யாவை சந்தித்து லோகேஷ் ஒரு கதை கூறியதாகவும், அந்த கதை அவருக்கு பிடித்து போக சம்மதம் சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது. இது ஒரு சயின்ஸ் பிக்ஷன் தொடர்பான கதை என்கிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.