சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் பிரியா வாரியர்
கடந்த முப்பது வருடங்களில் சுமார் நூறு படங்களுக்கு மேல் தயாரித்துள்ளது ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம். கடந்த சில வருடங்களாக பட தயாரிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த சூப்பர்குட் பிலிம்ஸ் தற்போது தெலுங்கில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. இதற்கான துவக்க விழா பூஜையும் நடைபெற்றுள்ளது. தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடிக்க, தனது கண் சிமிட்டல்கள் மூலம், புருவ அழகி என ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.. எஸ்.எஸ்.ராஜூ என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இஷ்க் என்கிற படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாக இருக்கிறது.. மலையாளத்தில் இந்த படத்தை அறிமுக இயக்குனர் அனுராக் மனோகர் என்பவர் இயக்கியிருந்தார். காதலர்களின் காதலில் போலீசாரும் அந்நியர்களின் தலையிடும் குறுக்கிட்டு என்னவெல்லாம் பிரச்சனைகளை அந்த காதலர்கள் சந்திக்கிறார்கள் என்பதுதான். இஷ்க் படத்தின் கதை.