சென்னை, கோவையை அலங்கரிக்கும் மாறா ஓவியங்கள்
ADDED : 1772 days ago
மாதவன், ஸரத்தா ஸ்ரீநாத், பத்மாவதி, அமராவதி நடித்த படம் மாறா. இது மலையாளத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற சார்லி படத்தின் ரீமேக். இந்த படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் நாயகன் ஒரு ஓவியன் ஊர் ஊராக சென்று சுவர்களில் ஓவியம் வரைவான். அந்த ஓவியங்களின் வழியாக தனது காதலை சொல்வான். அதை பின் தொடர்ந்து காதலி செல்வாள் இப்படியான கதை.
படத்தில் ஓவியங்கள் முக்கிய பங்கு வகிப்பதால் படத்தின் புரமோசனுக்காக சென்னை மற்றும் கோயம்புத்தூர் நகர் முழுவதும் படக் குழுவினர் படத்தில் இடம்பெறும் ஒவியங்களை வரைந்துள்ளனர். படத்தின் கலை இயக்குனர்களாக பணியாற்றிய கிறிஸ் பிளேர் வின்சென்ட், லோட்டஸ் ஹெட் ஆகியோர் வரைந்திருக்கிறார்கள். இந்த ஓவியங்கள் மக்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.