சில்லு வண்டுகள்: புதுமுகங்கள் உருவாக்கும் குழந்தைகள் படம்
ADDED : 1772 days ago
சரண்யா 3டி ஸ்க்ரீன்ஸ் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் சில்லு வண்டுகள். சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் அறிமுகமாகியுள்ளனர். மற்றும் கமலி, கார்த்திக், நிரஞ்சனி தனசேகரன், சீர்காழி பாலகுரு, டிரம்பட் பிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தேவா இசை அமைத்துள்ளார்.
சுரேஷ் கே.வெங்கிடி இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: இது முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்களை கொண்டு குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் என்பதை விட பாடம் என்றுதான் சொல்லவேண்டும். வாழ்கையில் அடி மட்டத்திலிருந்து, மேல் மட்டத்திற்கு வளர வேண்டும் என்றால் அதற்கு தவறான வழிகளை பின்பற்றக் கூடாது என்பதை இதில் ஆழமாக சொல்கிறோம்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மனநிலையில் சாதி,மதம், ஏழை, பணக்காரன் என்ற பிரிவினைகள் இருக்க கூடாது. அவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், உதவி செய்யும் எண்ணமும் உள்ளவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை இன்றைய குழுந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்தே இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். என்றார் இயக்குனர் சுரேஷ் கே.வெங்கிடி.