முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல்
ADDED : 1723 days ago
வி.இசட்.துரை இயக்கத்தில் இயக்குனர் அமீர் நாயகனாக நடித்துள்ள அரசியல் படம் நாற்காலி. சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், ராஜ்கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின், “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” என்ற பாடலை மறைந்த 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார். இப்பாடலை எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (ஜன., 16) முதல்வர் பழனிசாமி வெளியிட, அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக் கொள்கிறார்.
நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.இறுதிக்கட்ட பணிகள் முழுவேகத்துடன் நடக்கிறது. வரும் மார்ச் மாதம் திரையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.