உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடி வெளியிடுகளை ஓழுங்குபடுத்த வேண்டும் : தணிக்கை துறைத் தலைவர்

ஓடிடி வெளியிடுகளை ஓழுங்குபடுத்த வேண்டும் : தணிக்கை துறைத் தலைவர்

தகவல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பார்லிமென்ட் நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தணிக்கை குழு துறைத் தலைவர் பிரஜூன் ஜோஷி பேசியதாவது: திரையரங்குகளில், பொதுவில் திரையிடப்படும் படங்களுக்குத் தணிக்கை இருந்தாலும், ஓடிடி தளங்களுக்கு இல்லை. ஓடிடி தளங்களில் இருக்கும் படைப்புகள் திரையரங்குகளுக்கு வரும்போது அவை தணிக்கை செய்யப்பட வேண்டும். ஏனென்றால், ஓடிடி தளங்கள் தனி நபரைச் சென்று சேருபவை என்பதால் விதிகள் வேறுபடுகின்றன. ஆனால், இந்தத் தளங்களும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகையும், எம்.பி.யுமான சுமலதா ஓடிடி தளங்கள் சுதந்திரமானவை. அவற்றை கட்டுப்படுத்தக்கூடாது, தணிக்கையும் கூடாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !