உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள்

விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் விமர்சனங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகளே அனுமதிக்கப்பட்டபோதும் வசூல் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் மாஸ்டர் படங்கள் ஓடும் தியேட்டர்களில் கட்அவுட், பேனர்கள் என்று அவரது ரசிகர்கள் அமர்க்களப்படுத்தி வரும் நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று அங்குள்ள ஒரு தியேட்டர் வளாகத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துள்ள கெட்டப்பில் சிலை வைத்துள்ளனர். அதையடுத்து மாஸ்டர் படம் பார்க்க வரும் அனைத்து ரசிகர்களும் அந்த விஜய் சிலை முன்பு நின்று செல்பி எடுத்து அதை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !