போலீஸாக நடிக்கும் ஆரி
ADDED : 1733 days ago
'நெடுஞ்சாலை' உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஆரி, சமீபத்தில் நடந்த பிக்பாஸில் வெற்றி பெற்றார். வந்த கையோடு புதிய படம் ஒன்றில் போலீஸாக நடிக்கிறார். வித்யா பிரதீப் நாயகியாக நடிக்கும் இப்படத்தை அபின் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் பூஜையில் இயக்குனர் முருகதாஸ் பங்கேற்று துவக்கி வைத்தார். ஆரி நடிப்பில் ஏற்கனவே அலேகா, பகவான் படங்கள் தயாராகி வருகிறது. இந்த படங்கள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.