புதிய தொழில்நுட்பத்தில் இன்சைடர்ஸ்
ADDED : 1733 days ago
தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக, இன்சைடர்ஸ் என்ற படத்தை முழுவதுமாக கம்ப்யூட்டர் ஸ்க்ரீனிங் மூலம் உருவாக்கியுள்ளனர். 1998 - 2045 வரையில் நடந்ததும், நடக்கப்போவதும் தான் படத்தின் கதை. புதியவர் துாம்ஸ் கண்ணா இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் இந்த முறையில் படமாக்கப்படுவதை அறிந்து, புதிய தொழில்நுட்பத்தில் இதை உருவாக்கியுள்ளார். இப்படம் த்ரில்லர் படமாக அல்லாமல், போரை அடிப்படையாக கொண்டு உருவாக்கியுள்ளார். 1998 - 2020 வரையிலான கதையை முதல் பாகமாகவும், 1998ல் ஆரம்பித்து 2045 ஆண்டில் எப்படி கதை முடிகிறது என்பதை இரண்டாம் பாகமாகவும் உருவாக்குகின்றனர்.