உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மணிரத்னத்தின் நவரசாவில் யோகி பாபு

மணிரத்னத்தின் நவரசாவில் யோகி பாபு

இயக்குனர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் நவரசா என்ற ஆந்தாலஜி படத்தை தயாரித்து வருகிறார். இது 9 குறும்படங்களை கொண்ட ஒரு தொகுப்பாகும். அதாவது 9 எபிசோட்களாக வெளிவர இருக்கும் வெப் சீரிஸ் என்றும் வைத்துக் கொள்ளலாம். இதனை கே.வி.ஆனந்த், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கவுதம் மேனன், ரவீந்திரன் பிரசாத், அரவிந்த்சாமி ஆகியோர் இயக்குகிறார்கள்.

இதில் ஒரு படத்தை வேலையில்லா பட்டதாரி, ரஜினிமுருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குவதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சினையால் அவர் விலகிக்கொள்ள தற்போது அவருக்கு பதிலாக பிரியதர்ஷன் இயக்குகிறார். இதில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார். நவரசாவின் மற்ற எபிசோட்களில் சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த் நடிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !