ஹேக்கான நஸ்ரியாவின் இன்ஸ்டா
ADDED : 1818 days ago
தமிழ், மலையாளத்தில் பிரபலமான நடிகை நஸ்ரியா மீண்டும் படங்களில் நடித்தும், கணவர் பஹத் பாசில் உடன் இணைந்து படங்கள் தயாரித்தும் வருகிறார். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இதுப்பற்றி, ''சில ஜோக்கர்கள் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி உள்ளனர். சில நாட்கள் எனது பேஜில் இருந்து வரும் குறுஞ்செய்திகளுக்கு யாரும் பதிலளிக்காதீர்கள்'' என தெரிவித்துள்ளார் நஸ்ரியா.