ஜன., 22ல் ஓடிடியில் குருதி களம்
ADDED : 1720 days ago
இயக்குனர்கள் ராஜபாண்டி, தனுஷ் இயக்கத்தில் 13 அத்தியாயங்கள் கொண்ட “குருதி களம்” என்ற வெப்சீரிஸ் தயாராகிறது. சந்தோஷ் பிரதாப், அசோக் குமார், சவுந்தர் ராஜா, ஸ்ரீகாந்த், சனம் ஷெட்டி, மாரிமுத்து, வின்செண்ட் அசோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சென்னையில் இரண்டு கும்பல்களை சுற்றி நடக்கிறது இந்த தொடர். அவர்கள் வன்முறையின் மூலம் சென்னையை எப்படி ஆளுகிறார்கள் என்பதே இதன் கரு. எம்எக்ஸ் பிளேயரி-ல் ஜன., 22ல் இந்த தொடர் வெளியாகிறது.