உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சோலோ ஹீரோயினாக ஷ்ரத்தா ஸ்ரீநாத்

சோலோ ஹீரோயினாக ஷ்ரத்தா ஸ்ரீநாத்

விளம்பரத் துறையில் பணிபுரிந்து, சில குறும்படங்களை இயக்கியுள்ளவர் பிரமோத் சுந்தர். அவர் தற்போது இயக்கும் படம் கலியுகம். ஹீரோயின் சப்ஜெக்ட் படமான இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார். ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா தயாரிக்கிறார்.

ஹாரர் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது. பி.சி.ஸ்ரீராமிடம் பணிபுரிந்த ராம்சரண் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கவுரி சங்கர் மற்றும் ஜெய்சன் ஜோஷ் ஒலிப்பதிவு செய்கிறார்கள்.

முன்னணி ஹீரோயின்கள் தற்போது சோலோவாக ஹாரர் படங்களில் நடிப்பது டிரண்ட்டாக உள்ளது. நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா, வரலட்சுமி, சமந்தா, அமலாபால் ஆகியோர் இதுபோன்ற படங்களில் நடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் இது. இந்த படத்திற்காக பிரமாண்ட செட்டுகள் போட்டு அங்கேயே படத்தின் பூஜையும் நடந்தது. கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !