மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1688 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1688 days ago
டாக்டர் சாய் இயக்கி உள்ள படம் இ.பி.கோ 306. சாய் பிலிம்ஸ் சார்பில் சிவக்குமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் எம்எக்ஸ் ப்ளேயர் ஓடிடி தளத்தில் இன்று(ஜன., 22) வெளியாகிறது. படத்தில் தாரா பழனிவேல், சீனு மோகன் மற்றும் டாக்டர் சாய் நடித்துள்ளனர். படத்திற்கு சூரிய பிரசாத் இசையமைத்துள்ளார். செல்லப்பா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் டாக்டர் சாய் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் கோடீஸ்வரி 12ம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறுகிறார். மருத்துவக் கனவுடன் நீட் தேர்வை எதிர்கொள்கிறார். 12ம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் வெற்றி பெறாததால் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை.
அப்போது அவர் நீதிமன்றத்தை அணுகுகிறார். ஊடக உதவியையும் நாடுகிறார். இவற்றையெல்லாம் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் உள்ளூர் அரசியல்வாதி எப்படி மொத்த பிரச்சினையையும் அரசியலாக்குகிறார்? நீட் எப்படி ஒரு செல்வம் கொழிக்கும் தொழிலாக மாறுகிறது? கோடீஸ்வரிக்கு நியாயம் கிடைக்கிறதா? என்பது தான் கதை. நான் ஒரு டாக்டர் என்பதால் படத்தை உண்மைக்கு நெருக்கமாக இருந்து உருவாக்கி உள்ளேன்.
இத்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் இடம்பெற்று 4 விருதுகள் பெற்றுள்ளது. கோல்கட்டா தாகூர் சர்வதேச திரைப்படத் திருவிழாவில் இப்படம் இடம்பெற்று எனக்கு சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றுத்தந்து. ஆம்ஸ்டர்டாம் திரைப்பட விழாவிலும் விருது வென்றுள்ளது. ஈரானிய திரைப்படத் திருவிழாவில் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும், இத்திரைப்படம் சென்னை சர்வதேசத் திரைப்படத் திருவிழாவிலும் அதிகாரப்பூர்வ தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. என்றார்.
1688 days ago
1688 days ago