முதலில் தூக்கம் தொலைத்தேன்.. இப்போது சிரிக்கிறேன் : சமந்தா
ADDED : 1712 days ago
சமூகவலைதளங்களில் மிக தீவிரமாக இயங்கக் கூடியவர் நடிகை சமந்தா. இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், சமூகவலைதளங்களில் டிரால் செய்யப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சமந்தா, “ஒரு காலத்தில் டிரால் செய்யப்படும் போது அதை நினைத்தே தூக்கத்தை தொலைத்தேன். இதனால் பல இரவுகள் தூக்கம் இல்லாமல் இருந்திருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் டிராலர்களை நினைத்தாலே சிரிப்பு வந்துவிடுகிறது”, என குறிப்பிட்டார்.