கிரிக்கெட் பயிற்சியில் டாப்சி
ADDED : 1712 days ago
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை 'சபாஷ் மித்து' என்ற பெயரில் படமாகி வருகிறது. அவரது வேடத்தில் டாப்சி நடிக்க, ராகுல் தோலாகியா இயக்குகிறார். இப்படத்திற்காக நூஷின் அல் காதீர் என்பவரின் உதவியோடு கிரிக்கெட் ஆட பயிற்சி எடுத்து, படத்தில் நடிக்கிறார்.
''நான் இதற்கு முன்பு கிரிக்கெட் விளையாடியதில்லை, பார்வையாளராக இருந்திருக்கிறேன். இப்போது இப்படத்தில் நடிப்பதை எனக்கான சவாலாக பார்க்கிறேன். அதற்கான அழுத்தம் என்னுள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் என நம்புகிறேன் என்கிறார் டாப்சி.