மணல் கொள்ளையை மையமாக கொண்ட வீராபுரம்
ADDED : 1709 days ago
தற்போது தயாரிக்கப்படும் சிறுபட்ஜெட் படங்கள் புதிய புதிய சப்ஜெக்டுகளை கொண்டதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது அங்காடி தெரு மகேஷ் நடிப்பில் உருவாகி உள்ள வீராபுரம் 220 என்ற படம் மணல் கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது. சுபம் சினி கிரியேஷன் சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரித்துள்ளார். இதில் மகேசுடன், மேக்னா, மற்றும் வில்லனாக சதீஷ் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி இயக்குனர் செந்தில் குமார் கூறியதாவது.. வீராபுரம் 220 எனது முதல் திரைப்படம் ஆகும். இக்கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மணல் கொள்ளையை மையப்படுத்தியும், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் விரிவாக பேசியுள்ளது. இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. என்றார்.