ஆச்சார்யா vs நரப்பா : ஒரேசமயத்தில் மோதும் சீனியர்ஸ்
தெலுங்கு சினிமாவில் இளைஞர்கள் ஆதிக்கம் அதிகமாகி வந்தாலும் சீனியர்களும் களத்தில் டப் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் தொண்ணூறுகளில் போட்டி போட்டு தங்கள் படத்தை ரிலீஸ் செய்து வந்த நடிகர்கள் சிரஞ்சீவியும், வெங்கடேஷும் மீண்டும் ஒரேசமயத்தில் களத்தில் மோத இருக்கின்றனர். ஆம்.. சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படம் மே-13 ஆம் தேதியும், வெங்கடேஷ் நடித்துள்ள நரப்பா மே-14ஆம் தேதியும் என ஒருநாள் இடைவெளியில் ரிலீஸாக இருக்கின்றன. இந்த போட்டி இருவரது ரசிகர்களையும் ரொம்பவே உற்சாகப்படுத்தியுள்ளது.
இதில் ஆச்சார்யா படத்தை கொரட்டாலா சிவா இயக்கியுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம்சரணும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். வெங்கடேஷின் நரப்பா படம் தமிழில் தனுஷ் நடிப்பில் வெற்றி பெற்ற அசுரன் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. பிரியாமணி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை ஸ்ரீகாந்த் அத்தலா இயக்கியுள்ளார்.