உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 100 சதவீத அனுமதி

தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 100 சதவீத அனுமதி

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் நவம்பர் 10 முதல் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன. கடந்த மூன்று மாதங்களாக 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பிப்ரவரி 1 முதல்தான் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தார்கள்.

தென்னிந்தியாவில் மற்ற மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்குப் பிறகுதான் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனாலும், இதுவரையிலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கியுள்ளனர்.

கேரளாவில் பிப்ரவரி மாதம் முழுவதும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என அரசு அறிவித்துவிட்டது. தமிழ்நாட்டில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மற்ற மாநிலங்களில் உள்ள திரையுலகினரும் 100 சதவீத அனுமதி வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

'கேஜிஎப் 2, சலார்' பட இயக்குனராக பிரஷாந்த் நீல் கர்நாடக அரசுக்கு, “சினிமா அநேகம் பேருக்கு என்டர்டெயின்மெட், ஆனால், பலருக்கு அது வாழ்க்கை” என 100 சதவீத இருக்கைக்கு அனுமதி தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். அது போலவே மற்ற திரையுலகிலும் கோரிக்கை எழுந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !