மார்ச் 26ல் டாக்டர் ரிலீஸ்
ADDED : 1714 days ago
'அயலான், டாக்டர்' படங்களில் நடித்து முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன். இவற்றில் அவர் தயாரித்துள்ள 'டாக்டர்' படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, பிரியா மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பட ரிலீஸ் வேலைகள் வேகமாய் நடக்கின்றன. சில தினங்களுக்கு முன் டப்பிங் பணி முடிந்தது. அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் மார்ச் 26-ல் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.