எஸ்.பி.பிக்கு சிலை? -அமைச்சர் பதில்
ADDED : 1713 days ago
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு பத்மவிபூஷன் விருது அறிவித்துள்ளது. அதேபோல் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, எஸ்.பி.பிக்கு மணிமண்டபம் கட்ட இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இப்படியான நிலையில், விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இடத்தில், எஸ்.பி.பிக்கு தமிழக அரசு சார்பில் சிலை வைக்கப்படுமா?என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அதுகுறித்து அரசுக்கு உரிய கோரிக்கை வந்தால் எஸ்.பி பாலசுப்ரமணியத்துக்கு சிலை வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.