உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆந்திரா, கர்நாடகா 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி

ஆந்திரா, கர்நாடகா 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்டது. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், மற்ற மாநிலங்கள் அதற்கடுத்த மாதங்களில் தான் திறப்பதற்கு அனுமதித்தன. ஆனாலும், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பிப்ரவரி 1 முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதையடுத்து மற்ற மாநிலங்களிலும் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அந்தந்த மாநில திரையுலகினர் கோரிக்கை வைத்தனர்.

தற்போது ஆந்திர மாநிலம் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அந்த அனுமதியை நிலைமைக்கேற்ப மாவட்ட கலெக்டர்கள் முடிவெடுத்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 4 வாரங்களுக்கு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளனர்.

கேரளாவில் இந்த மாதம் முடியும் வரை 50 சதவீத இருக்கைகள் தான் என அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுவிட்டது. தெலங்கானாவில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் மூலம் தியேட்டர்களில் ரசிகர்கள் வருகை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !